Lyrics only - Sangarathai temple song
சங்கரத்தை பீட்டியம்பதி வீரப்பதிரசுவாமி சமேத பத்திரகாளி அம்பாள் பதிகம்
அக்குமணி மிக்கசெக் கர்ச்சடையு முக்கண்ணுமாயிரங் கமலமுகமும்
அணிமணிக் குண்டலங் குழைகளுங் குலமலையினழகொழுகு கனக புயமும்
தொக்குயர் படைக்கலக் கைகளும் மார்பிற்றுருலங்கு செம்பொன்னாரமும்
சுருதியுங் கருதரிய பரிபுர பதங்களுந் தோன்ற வந்தெனை யாளுவாய்
தக்கனொடு மக்கள் மருமக்கள் பக்கத்தில்லுறை சதுர்முகன் முதல் வானவர்
தங்கள் கருவங்களதிபங் கம்படச் சிவன் தலைமை நிலையிட்ட முதல்வா
திக்குலவு சோலையுஞ் சாலையும் பாலிற் செறிந்த பிட்டிப் பதியில் வாழ்
சித்திர வலங்கார பத்திரக்களிக்கன்பு திகழ்வீர் பத்திர குருவே.
திருமரவு பரம சங்கர கிருபாகர வரத திரிபுராந் தகபகவனைத்
திடமனதுடனன்று வடவனத்தினின்று சேர்ந்து வாதாடியோடி
உருமருவு மண்டலமோ டண்டர்பயில் எண்டிசைகள் உயரண்ட ரண்ட முழுதும்
உன்னியெழு கோரிமாவீர் சடையன் பாரி உயிரி ரீங்காரி சூரி
மருமருவு சடிலதர காளிகங் காளிசர் வாணி மாதங்கி சூலி
மதமகிட சந்காரி வீரசிங்காரி நெடுவாரி சூழ்பாரினிலவும்
தருமருவு பிட்டிநகர் உறையுமொரு கௌரியே
தயவுவைத்தெம்மை யாளுவாய்
சத்தியுத்தமி சித்ரமெத்து வித்தகி
நித்திய சத்தி பத்திரிகாளியம்மையே
No comments:
Post a Comment