Music by Abiramy Logeswaran (World Music Abi)
Kalyani Ragam (Lydian Dominant Scale)
The lyrics of this song express praise of Lord Muruga (a Hindu deity).
வசனம்: வேந்தனார் இளஞ்சேய்
இசை: அபிராமி லோகேஸ்வரன்
இராகம் கல்யாணி
சேயோனே அருள் புரிவாய்
ஆறுமுகா அருளாளா
அடியவர்கள் துயர்தீராய்
வேல்முருகா வடிவழகா
வேண்டும்வரம் நீதாராய்
மால்மருகா மயில்வாகனா
மக்கள்துயர் போக்கிடுவாய்
நல்லூரா நம்தலைவா
நன்றேயெமைக் காத்திடுவாய்.
காங்கேயா நம்மையா
கருணை நீ காட்டிடுவாய்
கந்தனே எம்கடவுளே
குறைகளை தீர்த்திடுவாய்
வேலவனே பாலகனே
வேதனையை விரட்டிடுவாய்
வள்ளிமணாளா ஐயனே
வணங்குகின்றேன் சரணமையா
செவ்வேளே சரவணா
செந்தமிழில் உனைவணங்க
நம்தமிழர் விரும்பியே
நாளும் உனைத்துதித்திட
கருணைதான் நீகாட்டி
காத்தெமை வழிகாட்டி
செய்திடவே தமிழ்வழிபாடு
சேயோனே அருள்புரிவாய்.
If you like this, check out my content via the following links:
Buy me a drink at https://ko-fi.com/worldmusicabi/posts
No comments:
Post a Comment